இலங்கையில் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்

ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியபண்டார, ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளிடம் வினவியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும்போதே ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர,
நாட்டில் சுமார் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 5 புதிய ரயில் பெட்டிக் கட்டமைப்புகளை கொள்முதல் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் இயந்திரவியல் பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் கே.கே. ஹேவாவிதாரண இதன்போது கருத்து தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!