இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட 637 வாகனங்கள்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட பல்வேறு மாதிரிகள் கொண்ட 637 வாகனங்கள், பாவனைக்கு தகுதியற்றதாக சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 435 வாகனங்கள் மட்டக்குளியில் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள 202 வாகனங்கள் ருஹுனுபுர துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வாகனங்களில் 36 வாகனங்கள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன.

சுங்கத் திணைக்களம் தொடர்பாக கடந்த ஆண்டிற்கான கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவற்றில் பல வாகனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுங்கக் கணக்காய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!