தூங்கிக் கொண்டிருந்த சிறுமி பாலியல் பலாத்காரம்!

மொனராகலை , அம்பிட்டிய பிரதேசத்தில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த 15 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயதுடைய ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி, தனது தந்தை கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை( 29) இரவு தாய் மற்றும் சகோதரியுடன் ஒரே அறையில் கட்டில் ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்துள்ளது.

தப்பியோடிய சந்தேகநபர்

சிறுமி அதிகாலையில் எழுந்த போது அவள் அருகில் யாரோ அமர்ந்திருப்பதை உணர்ந்துள்ளார். இதன்போது சந்தேக நபர் வெள்ளைத் துணியால் முகத்தை மறைத்து இருந்த நிலையில் குறித்த சிறுமி சந்தேக நபரின் கையைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.

அப்போது சந்தேக நபர், “கையை விடு” என்று கூறியதும், அவரது குரலில் இருந்து அவர் பந்துல என்ற நபர் என சிறுமி அடையாளம் கண்டதையடுத்து சந்தேக நபர் தப்பியோடி உள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வீட்டைச் சோதனையிட்டபோது, ​​சந்தேகநபர் சமையல் அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை ​பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Special News :

Related Posts :

Entertainment :

Recent Videos

Special News

sritharan
தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என சிறீந்திரன் வேண்டுகோள்!
death
யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!
parliament
கடந்த 10 ஆண்டுகளில் இரு அரசாங்கங்களின் நாடாளுமன்ற செலவினங்கள்,அநுர எடுத்த அதிரடி!
Maithripala-Sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என மைத்திரி பகிரங்கம்!
coconut
உச்சம் தொட்ட தேங்காய் விலை!
farmer
விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்!