நாட்டில் பயங்கர விபத்து, இளம் தாய் மரணம், சிறுவன், சிறுமி மருத்துவமனையில்!

கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024) இந்துரானை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் இந்துரானை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிட்டம்புவையில் இருந்து ருவன்வெல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் வலதுபுறம் உள்ள பக்க வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதியான தாய், 4 வயது சிறுவன் மற்றும் 10 சிறுமி ஆகியோர் கொனகல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!