இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டு 2 சதவீதமாக இருக்கும் என ப்ளூம்பேர்க் எதிர்வு கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் மறை 4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில் ப்ளூம்பேர்க் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பணவாட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பணவாட்ட நிலைமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்காது எனவும் பணவீக்கம் எதிர்வரும் மே மாதத்தில் மீட்சியடைய ஆரம்பித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய வங்கியின் இலக்குடன் ஒன்றிணையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பணவாட்ட நிலைமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்காது எனவும் பணவீக்கம் எதிர்வரும் மே மாதத்தில் மீட்சியடைய ஆரம்பித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய வங்கியின் ஒன்றிணையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதற்காக இலங்கை மத்திய வங்கி தற்போது பேணும் 8 சதவீத கொள்கை வட்டி விகிதம் பொருத்தமான இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. (ப)