🔴 VIDEO சங்கானையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! CCTV

நேற்றையதினம் சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துளந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது மாதகல் மேற்கு, மாதகல் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உலகேந்திரம் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நேற்றையதினம் இன்னொருவரையும் ஏற்றியவாறு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட்டனர்.

பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்