புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் எடுத்த தீர்மானம்!

பிரித்தானியாவில் மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீடுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தீர்மானித்துள்ளன.

முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புகலிடக்கோரிக்கையாளர்களை Portland என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள, Bibby Stockholm என்னும் மிதக்கும் படகில் தங்கவைத்தது.

புகலிடக்கோரிக்கையாளர்கள்
எனினும், புதிய லேபர் அரசோ, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அவர்களை ஹொட்டல்கள் மற்றும் வீடுகளில் குடியமர்த்த முடிவு செய்துள்ளது.

அவர்களில் சுமார் 400 பேர் தற்போது அந்த படகுகளிலிருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.
ritons Furious சிலர் Wolverhampton என்னுமிடத்திலுள்ள விடுதி ஒன்றிலும், மற்றவர்கள் Worksop என்னுமிடத்தில் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த முடிவு உள்ளூர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய அரசின் தீர்மானம்
கன்சர்வேட்டிவ் கட்சி கவுன்சிலரான Fraser McFarland என்பவர்,“ இது அதிர்ச்சியளிக்கவைக்கும் துரோகம்.

எங்கள் மக்களுக்கு சரியான வீடுகள் இல்லை, அவர்கள் குளிரில் அவதியுறும்போது, லேபர் அரசு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை Bassetlawவிலுள்ள வீடுகளில் குடியமர்த்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “உள்ளூரில் வாழும் எங்கள் குடும்பங்கள் தங்க சரியான வீடில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை.

ஆனால், எங்களுக்கு முன்னால் இந்த புலம்பெயர்ந்தோருக்கு வீடுகள் கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம்” என்று உள்ளுர்வாசி ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!