புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்? டிரம்ப் இற்கு ஆப்பு! 81% பேர் ஆதரவு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இடையே தற்போது கடும் வார்த்தைப் போர் வெடித்து உள்ளது. இருவரும் ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்து வேறுபாடுகள் காரணமாக வெகுவாக மோதிக் கொண்டுள்ளனர்.

FILE – Elon Musk, left, shakes hands with President Donald Trump at the finals for the NCAA wrestling championship, March 22, 2025, in Philadelphia. (AP Photo/Matt Rourke, File)

இதனைத் தொடர்ந்து, தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்காவின் 80 சதவிகித நடுத்தர மக்களின் பிரதிநிதியாக ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டதா? என்று எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

அந்த வாக்கெடுப்பில் சுமார் 81 சதவிகிதம் பேர் ‘ஆம்’ என வாக்களித்துள்ளனர். மேலும், 19 சதவிகிதம் ‘இல்லை’ எனும் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அவ்வப்போது, தனது புதுப்புது செயல்களினால் சர்வதேச அளவில் ரசிகர்களையும், விமர்சகர்களையும்

என்ன பிரச்சனை?

சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட புதிய வரி மற்றும் செலவின மசோதாவில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் சுமார் 8% வீழ்ச்சி கண்டன. இதைத் தொடர்ந்து, மசோதாவை “அருவருப்பானது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் மஸ்க்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “எலான் மீது நான் மிகுந்த அதிருப்தியில் உள்ளேன். நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இனிமேல் அப்படி இருக்கும் என தெரியவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், மஸ்க் தான் மசோதாவை ரத்து செய்யுமாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் தனது பதிலில், “டிரம்ப் நன்றி மறந்தவர். அவரது தேர்தல் வெற்றிக்காக நான் மில்லியன் கணக்கில் பணம் செலவழித்தேன். நான் இல்லையென்றால் அவர் வெற்றி பெற்றிருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வாக்குமூலங்கள் இருவருக்கிடையேயான நெருக்கமான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கின்றன. அரசியல் மற்றும் தொழில்துறை உலகில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இரண்டு நபர்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றுள்ள எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்டார். ஆனால், அவர் தனது பதவி விலகியபோது மஸ்க்கின் ஆதரவாளர்கள் டிரப்புக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கத் துவங்கினர்.

தற்போது, டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கி துணை அதிபர் ஜேடி வேன்ஸ்-ஐ அதிபராக்க வேண்டும் என்ற கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவுத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெருவாரியான ஆதரவு அவருக்கு கிடைத்துள்ள நிலையில் விரைவில் எலான் மஸ்க் புதிய கட்சி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்