கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.
இதன்போதே உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதுடன், சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.