கிளிநொச்சியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்; இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (22) அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதேவேளை இரணைமடு குளம் வான்பாய்ந்து வருவதுடன், குளத்தின் சகல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் உள்ளிட்ட நீர்பாசனக் குளங்களும் வான்பாய்ந்து வருகின்றன. இதனால் வெளியேறும் வெள்ள நீர் மக்கள் குடியிருப்புக்கள், உள்ளக வீதிகளை கடந்து செல்கிறது.

வெள்ளம் வழிந்தோடும் நிலையில் கண்டாவளை, கோரக்கன்கட்டு, முரசுமோட்டை, ஊரியான் உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகிறது.

அத்துடன் அப்பிரதேசங்களில் சீரற்ற வானிலையால் சரிந்து விழுந்த மற்றும் முறிந்து வீழும் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை பாதுகாப்பாக அகற்றி, போக்குவரத்தை சீர்ப்படுத்தும் பணிகளில் அரச மரக் கூட்டுத்தாபனத்தினர் விரைந்து செயற்பட்டு வருகின்றனர்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

airoplane
பயணிகள் விமானம் தலைகீழாக விழுந்து விபத்து, கனடாவில் சம்பவம்!
ravisanth karunakara
புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை!
ship
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பு!
archuna
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மற்றொரு கருப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் என அர்ச்சுனா சுட்டிக்காட்டு!
home
புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை என அறிவிப்பு!
thaiyiddii
தையிட்டி விகாரையின் இடமாற்றம், அநுர அரசிற்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!