இந்தியாவுடனான எரிபொருள் விநியோக திட்டம், அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு!

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா(india)-இலங்கை(sri lanka) இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவா் ராஜகருணா(rajakaruna) தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்க முடியாது எனவும் அவா் தெரிவித்தாா்.

அநுரவின் இந்திய விஜயத்தில் பேசப்பட்ட விடயம்
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kuara dissanayake)சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது பெட்ரோல் விநியோக குழாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த ராஜகருணா கூறியதாவது,

அரசியல் காரணங்களுக்காக முடிவுகளை மேற்கொள்ள முடியாது
இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டத்தை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். அரசியல் காரணங்களுக்காக இதில் எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முடியாது.

இது தொடா்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனும் விவாதித்தேன் என்றாா்.

இருநாடுகளிடையே எரிசக்தி பகிா்வை மேம்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக பெட்ரோலிய விநியோக குழாய் முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் இருநாடுகளிடையே மின்பகிா்மானத்தை ஊக்குவிக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது

Special News :

Related Posts :

Entertainment :

Recent Videos

Special News

sritharan
தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என சிறீந்திரன் வேண்டுகோள்!
death
யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!
parliament
கடந்த 10 ஆண்டுகளில் இரு அரசாங்கங்களின் நாடாளுமன்ற செலவினங்கள்,அநுர எடுத்த அதிரடி!
Maithripala-Sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என மைத்திரி பகிரங்கம்!
coconut
உச்சம் தொட்ட தேங்காய் விலை!
farmer
விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்!