யாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகள் ; கூட்டணியாகக் கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் இதனை மறுத்திருந்தனர்.

அதனையடுத்து இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (5) கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கூட்டணியாக இணைந்து வட, கிழக்கு மாகாணங்களில் எத்தனை உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்க்கிறீர்கள் என வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களில் 10 சபைகளில் தம்மால் ஆட்சியமைக்கமுடியும் எனவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அநேகமாக 4 சபைகளில் ஆட்சியமைக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆகவே இவ்விடயத்தில் தமிழரசுக்கட்சி சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார். youtube

(நா.தனுஜா)

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!