உலகளாவிய ரீதியில் அனைவராலும் அதிகம் பயன்படுத்தும் செயலியாக கூகுள் உள்ளது.
இந்நிலையில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (Artificial Interligence – AI) செயலியான ஜெமினி தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தொலைபேசிகளில் கூகுள் அஸிஸ்டன்டுக்கு பதிலாக ஜெமினியை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

1500 பக்க ஆவணங்கள், 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு செய்து விபரத்தை பெற முடியும் என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
டேட்டா அனாலிட்டிக்ஸ் முதல்கொண்டு எண்கள் இருக்கக்கூடிய ஆவணங்கள் வரையில் அனைத்து விடயங்களையும் வகைப்படுத்திக் கொடுக்கும் என கூகுள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.