யாழ் கொடிகாமத்தில் ரயிலுடன் ஹயஸ் வான் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வான் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 4 மணிக்கு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த வான் தவசிகுளம் பகுதிக்கு செல்வதற்காக ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

வானில் சாரதியுடன் மேலும் ஒருவர் பயணித்துள்ளார். இந்த நிலையில் இடம்பெற்ற விபத்தில் தெய்வாதீனமாக இருவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை எனவும் வான் பின் பகுதியில் சிறிய சேதங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

thaiyiddii
தையிட்டி விகாரையின் இடமாற்றம், அநுர அரசிற்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
goverment
அநுர அரசினால் அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடி!
ctp bus
பேருந்து மிதிபலகையில் நின்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து ஒருவர் பலி!
entry
தாய் மாயம், 3 குழந்தைகள் தவிப்பதாக உறவினர்கள் புகார்!
moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!