தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரித்தானியா ஒக்ஸ்போர்டில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இடம்பெற்றவுள்ளது.

அணிவகுப்பு இசையுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசிய கொடி கையளிக்கப்பட்டவுடன் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பொதுச் சுடரினை திரு.சதிஷ் சர்மா, வணபிதா எல்மோ அடிகளார், திரு. அமுது இளஞ்செழியன், திருமதி சுகன்யா சோதிதால், செல்வன், திகள்பருதி செல்வதால் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் வைபவம் இடம்பெற்றது . கொடியேற்றப்பட்டதும் தேசியத் தலைவரின் 2008 ஆண்டு மாவீரர் நாள் உரை வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மணி ஒலிக்கப்பட்டு பிரதான சுடர் ஏற்றப்பட்டது. சுடரினை நிதித் துறைப் பொறுப்பாளரான தமிழ்க் குமரன் அவர்களின் புதல்விகளான அன்புமொழி, அறிவு ஆகியோர் ஏற்றிவைத்தனர்.