லஞ்சம் பெற்றதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரி கைது!

5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு குடியகல்வு நிறுவனத்தில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதற்காகவே சந்தேகநபர் இந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குடிவரவு திணைக்களத்தின் வெலிசர தடுப்பு நிலையத்தில் கடமையாற்றும் குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!