நாட்டில் தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரிப்பு!

தகாத உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 111,709 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 113,188 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் 9,636 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 10,408 ஆகவும் அதிகரித்துள்ளன.

கணவர் அல்லது மனைவியினால் ஏற்படும் துன்புறுத்தல்கள் , புறக்கணிப்புகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 22,584 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில், கணவர் மனைவி இருவருக்கும் இடையில் புரிந்துணர்வின்மை , உடலுறவின்மை, அன்பின்மை மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாகத் தகாத உறவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

sumanthiran, shritharan ,
சுமந்திரனின் சதியை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய சிறிதரன்!
Newborn baby
யாழில் பிறந்த சிசுவை கிணற்றில் வீசிய கொடூரம்!
cancer
ரூ.76,000க்கு விற்ற புற்றுநோய் தடுப்பூசி ரூ.370 ஆக விலை குறைப்பு.
alovera
கற்றாழை பயன்படுத்துவதன் நன்மைகள்.
mahinda
ஜனாதிபதி அனுரவை எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!
police
சாலையின் நடுவில் போக்குவரத்து போலீசாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!