பலாப்பழம் விழுந்து கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழப்பு – கேகாலையில் துயர சம்பவம்!

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, லிஹினியகல பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இரவு ஒரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில், கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டுக்கு அருகிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று வீட்டின் கூரையை உடைத்து, தூங்கிக் கொண்டிருந்த தாயின் வயிற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கடும் வேதனையால் துடித்த தாயை உடனடியாக தெரணியகல மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், வயிற்றில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு