‘Siri’ உங்களை விளம்பரங்களுக்காக உளவு பார்க்கின்றதா?

ஆப்பிள், தனது குரல் உதவியாளரான சிரியால் (Siri) சேகரிக்கப்பட்ட தரவுகளை விற்கவோ அல்லது சந்தைப்படுத்தும் சுயவிவரங்களை உருவாக்க அதனை பயன்படுத்தவோ இல்லை என்று புதன்கிழமை (08) கூறியது.

ஆப்பிள் அதன் குரல் உதவியாளர் சிரிக்கு (Siri) எதிரான வழக்கைத் தீர்ப்பதற்கு 95 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கு ஒப்புக் கொண்ட சில நாட்களுக்கு பின்னர் ஆப்பிளின் இந்த அறிக்கை வந்துள்ளது.

நிறுவனம் பயனர் தரவைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது மற்றும் அதன் அனைத்து தயாரிப்புகளும் ஒரே அடித்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

அதில், சந்தைப்படுத்தும் சுயவிவரங்களை உருவாக்க ஆப்பிள் ஒருபோதும் Siri தரவைப் பயன்படுத்தவில்லை என்றும், எந்த நோக்கத்திற்காகவும் அதை எவருக்கும் விற்பனை செய்யவில்லை.

Siri ஐ மேலும் தனிப்பட்டதாக மாற்றுவதற்கான தொழில்நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம், தொடர்ந்து அதைச் செய்வோம் என்றும் ஆப்பிள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மொபைல்களில் சிரியை ஆக்டிவேட் செய்த பின்னர், ஆப்பிள் அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை வழக்கமாகப் பதிவுசெய்து, இந்த உரையாடல்களை விளம்பரதாரர்கள் போன்ற மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தியதாக அண்மைய வழக்கு கடந்த வாரம் வெளிவந்தமையும் குறிப்படத்தக்கது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

airoplane
பயணிகள் விமானம் தலைகீழாக விழுந்து விபத்து, கனடாவில் சம்பவம்!
ravisanth karunakara
புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை!
ship
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பு!
archuna
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மற்றொரு கருப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் என அர்ச்சுனா சுட்டிக்காட்டு!
home
புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை என அறிவிப்பு!
thaiyiddii
தையிட்டி விகாரையின் இடமாற்றம், அநுர அரசிற்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!