பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி தனித்தே களமிறங்கும் – எம்.ஏ.சுமந்திரன்

பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளுக்கு அழைப்பை விடுத்திருந்தோம், அவர்கள் எமது அழைப்பை ஏற்று கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர்கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம்,

இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்திருந்தோம்

அதே கூட்டத்தில் அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழர்சு கட்சியாகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்

ஆகவே, நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு என்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப்படுத்துமாறும், அதேவேளை நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றை கருத்தில் எடுத்து தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம் என தெரிவித்தார்

மேலும், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள்,யுவதிகள்,ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுடன், ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்

Special News :

Related Posts :

Entertainment :

Special News

Litro gas
உள்நாட்டு எரிவாயுவின் விலையில் மாற்றமா?
vehicles
ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் மீண்டும் அந்தந்த நிறுவனங்களிடம் கையளிப்பு!
kalimukaththidal
காலிமுகத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியவர்களின் பட்டியல் வௌியானது
Central-Bank-srilanka
இலங்கையில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
arber
அமெரிக்க கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், மூடப்பட்ட துறைமுகங்கள் !
gold
நாட்டில் மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை!