அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதவான் உத்தரவு!

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை யாகாத சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

-மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா விற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா வின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன்கிழமை(30) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்ற நிலையில் அவர் மன்றில் முன்னிலையாக வில்லை. மேலும் இரண்டு பிணைதாரர் களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பினையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலை யாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

sumanthiran, shritharan ,
சுமந்திரனின் சதியை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய சிறிதரன்!
Newborn baby
யாழில் பிறந்த சிசுவை கிணற்றில் வீசிய கொடூரம்!
cancer
ரூ.76,000க்கு விற்ற புற்றுநோய் தடுப்பூசி ரூ.370 ஆக விலை குறைப்பு.
alovera
கற்றாழை பயன்படுத்துவதன் நன்மைகள்.
mahinda
ஜனாதிபதி அனுரவை எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!
police
சாலையின் நடுவில் போக்குவரத்து போலீசாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!