காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பு!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் எதிர்வரும் 22.02.2025 ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது, காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

laxmi
லட்சுமி ஜெயந்தி அன்று மகாலட்சுமியின் அருளைப் பெற இப்படி வழிபட மறக்காதீர்கள்.
WEATHER
நாட்டில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை!
death
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு, எந்த நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
trump
இலங்கைத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப், நழுவும் அநுர!
digetal
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் விசேட அறிவிப்பு!
jaffna
யாழ் குடும்பம் ஒன்றின் மனிதாபிமானம்!