யாழ்ப்பாண நபரிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாண நபர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.

.இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் விசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை விடுவிப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

airoplane
பயணிகள் விமானம் தலைகீழாக விழுந்து விபத்து, கனடாவில் சம்பவம்!
ravisanth karunakara
புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை!
ship
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பு!
archuna
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மற்றொரு கருப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் என அர்ச்சுனா சுட்டிக்காட்டு!
home
புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை என அறிவிப்பு!
thaiyiddii
தையிட்டி விகாரையின் இடமாற்றம், அநுர அரசிற்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!