கனடா (Canada) – டொராண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் கனடா – டொராண்டோ (Toronto) பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானத்தில் 80 பேர் பயணம் செய்ததாகவும், விபத்தில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைகீழாக புரண்ட விமானம்
விமானம் தரையிறங்கும் பொழுது விபத்துக்குள்ளாகி தலைகீழாக புரண்டதுடன் விமானம் தீப்பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தை அடுத்து இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதாகவும் கடுமையான பனிப்பொழிவு நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சர்
இந்நிலையில், விபத்தின் போது விமானத்தில் 80 பேர் இருந்ததை மத்திய போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தினார்.
மின்னியாபோலிஸிலிருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 விமான நிலையத்தில் நடந்த விபத்து சம்பவத்தை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. பயணிகள் நாங்கள் கவனித்து வருகிறோம் என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த வாரம் கனடாவில் புயல் காரணமாக வார இறுதி விமானங்கள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.