அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

நேற்றுமுன்தினம் (30 May) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.

கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

வளலாய் மேற்கு,

அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!