மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கான மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று காலை 11:15 மணி முதல் ஏற்பட்ட மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர்
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம, சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம்!
பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இச் சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல இடங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
