அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி நிதிப் பணம் குறித்து ரணில் அறிவிப்பு!

2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் கையாளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு கோரிக்கையை தவிர, எந்தவொரு தனிநபருக்கும் ரூ.1 மில்லியனுக்கு மேல் நிதி உதவி வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட பல குறிப்பிடத்தக்க விநியோகங்கள் அவர் வெளியிட்ட அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்ட நிதியுதவிகள்

  • மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஈ.ஏ.இசுர தேவப்பிரிய பெரேரா நவலோக வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.
  • ரூ. லங்கா ஹொஸ்பிடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யு.சரத் கொங்கஹகே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500,000.வழங்கப்பட்டது.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி.முத்துக்குமாரான விஷன் கேர் நிறுவனத்திடம் இருந்து காது கேட்கும் கருவிகளை வாங்க ரூ. 400,000.வழங்கப்பட்டது.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.ஜகத் குமார ஆசிரிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 மில்லியன் வழங்கப்பட்டது.

இதேவேளை, மூத்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு இந்தியாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் மூலம் ரூ. 5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கலை மற்றும் சினிமா துறைக்கு பொன்சேகா ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்த ஆதரவு வழங்கப்படுவதாக விக்கிரமசிங்க கூறினார்.

பல கலைஞர்கள் உதவிகளைப் பெற்றுள்ளனர்
கடந்த இரண்டு வருடங்களாக மேலும் பல கலைஞர்கள் இதே போன்ற உதவிகளைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி நிதியமானது ரூ. 100 மில்லியன் நிதியுதவியை மருத்துவ சிகிச்சைக்காக வழங்கியுள்ளது. நோயாளிகள், விண்ணப்பதாரர்கள் மற்றும் தீவிர கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான ஆதரவு இதில் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

airoplane
பயணிகள் விமானம் தலைகீழாக விழுந்து விபத்து, கனடாவில் சம்பவம்!
ravisanth karunakara
புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை!
ship
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பு!
archuna
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மற்றொரு கருப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் என அர்ச்சுனா சுட்டிக்காட்டு!
home
புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை என அறிவிப்பு!
thaiyiddii
தையிட்டி விகாரையின் இடமாற்றம், அநுர அரசிற்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!