🔴 UPDATE வயிற்றில் இருந்த கரப்பமே வவுனியா ஆசிரியையின் தலையை வெட்ட காரணம் – அதிர்ச்சித் தகவல்கள்

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்று (03.06) இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சித் தகவல்கள்

சுவர்ணலதா என்ற 32 வயதான நைனாமடு அரச பாடசாலையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

@a7tv.com

மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல் 🔴READ MORE – https://a7tv.com/shocking-information-is-the-reason-why…/ a7tvnews a7tv srilankanewstamil srilankannews srilankatamilnews srilankanews srilankalatestnews srilankanewstoday news srilankanewstoday breakingnewssrilanka srilankanews srilankanewslive srilankalatestnews srilankanewstamil srilankatamilnewstoda#tranding #viralnews #srilankatiktok #viralvideos

♬ original sound – A7tv – A7tv

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் தனது மனைவியை வெட்டியதாகவும், அவர் சிறிது தூரம் ஓடி விழுந்ததன் பின்னர் தான் மனைவியை மூன்று முறை வெட்டி கழுத்தை துண்டாக்கி அதனை அவர் அணிந்திருந்த மழைக் கவசத்தினால் மூடி மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து கொண்டு வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர். இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News – vasantharupan

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kanavan manavi
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
15 people died in Sri Lanka in 24 hours
இலங்கையில் 24 மணி நேரத்தில் 15 பேர் பலி.
skynews-hospital-beer-sheva_6945606
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!
baba
காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு
nari
நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்!
tna
தமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..