லெபனானிற்கும் சிரியாவிற்கும் பயணம் மேற்கொள்வதை இலங்கையர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
லெபனானிலும் சிரியாவிலும் உள்ள இலங்கையர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சு வெளியில்நடமாடுவதை குறைத்துக்கொள்ளுதல் பெய்ரூட் டமஸ்கஸில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பை பேணுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.