அகில இலங்கை தபால் தலை மற்றும் நாணயவியல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தபால் தலை கண்காட்சி இன்று (23) தபால்தலை பணியக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (25) வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியில் உலகின் மிக நீளமான முத்திரை உட்பட பெறுமதிமிக்க முத்திரைகளை கொள்வனவு செய்வதற்கான தனித்துவமான வாய்ப்பு பார்வையாளர்களுக்கு கிடைக்கும்.
