வவுனியா பகுதியில் மாமியாரை கொலை செய்தவருக்கு நேர்ந்த கதி!

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!