காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய காதலன்.

காதல் தேவைதான். எங்கே, எதற்கு காதல் தேவை என்பதுதான் முக்கியம். அந்த காலத்தை பொறுத்தவரை காதலுக்கு பெரும் பாலும் எதிர்ப்பு தான் காட்டுவார்கள். ஆனால், தற்போதைய காலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பிள்ளைகள் நடந்துகொள்ளும் விதம் மற்றும் எடுக்கும் முடிவுக்கு பயந்து பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டிவிடுகின்றனர்.

இதை அதீத உரிமையாக எடுத்துக்கொண்டு இன்றைய தலைமுறையினர் மிகவும் அத்துமீறலான செயல்களில் ஈடுபட்டு வருவதையும் நாம் அன்றாடம் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

இப்படிதான் இந்தியாவின் விருதுநகர் பகுதியில் சமூகவலைத்தளத்தில் உண்டான காதல், விபரீதத்தில் முடிந்துள்ளது.

இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருபவர்தான் பாண்டிச்செல்வி. இவருக்கு 25 வயது. இந்நிலையில் பாண்டிச்செல்விக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகருக்கும் முகநூல் (Facebook)மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பழக்கம் தீவிரமடையவே, குணசேகருக்கு பாண்டிச்செல்வி மீது காதல் மலர்ந்துள்ளது.

இதனால் பாண்டிச்செல்வியை காதலிக்குமாறு வற்புறுத்தியதுடன் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் மிரட்டியுள்ளார். ஆனால், பாண்டிச்செல்வியோ மறுத்துவிட்டார். அவரிடமிருந்து வரும் அழைப்புகள், குறுந்தகவல்களை புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அனைவரும் எதிர்பாரா அந்த கோர சம்பவம் அரங்கேறியது. பாண்டிச்செல்விக்கு தெரியாது இப்படி ஒரு சம்பவம் நடக்கபோகிறது என்பது.

நேற்று காலை பொழுதில் பாண்டிச்செல்வியின் வீட்டிற்கு வந்த குணசேகர், கையோடு எடுத்துவந்த மண்ணென்னையை பாண்டிச்செல்வி மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு, அங்கிருந்து நொடிப்பொழுதில் தப்பிச் சென்றுள்ளார்.

இதில் பலத்த தீக்காயங்களுக்கு இலக்கான பாண்டிச்செல்வியை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியும் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

இருவரின் அலறல் சத்தம் அந்த பகுதியை மிரட்டவே, ஓடிவந்த அயலவரகள் இருவரையும் மிட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தெய்வாதீனமாக அக்கா, தங்கை இருவரும் உயிர் பிழைத்துள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது தலைமறைவாகியுள்ள குணசேகரனையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

காதல் என்ற பெயரில் இந்த காலத்து இளையோர் பழிவாங்கல் வேலைகளையே செய்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

அதேசமயம், இன்றைய காலகட்ட காதல் எங்கே, எப்படி உருவாகி, எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதுதான் தலையாயப் பிரச்னையாக காணப்படுகிறது.

ரெண்டும் கெட்டான் வயதான 16-க்கும் 20-க்கும் இடைப்பட்ட வயதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் – பெண்கள், காதல் என்ற வலையில் சிக்கி தங்களது எதிர்காலத்தை வீணாக்கி வருவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், காதல் என்றால் என்னவென்பதே அறியாமல் நண்பர்கள், தோழிகள் பெருமைபடப் பேசுவதை நம்பி, காதல் என்ற பெயரில் பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் தங்களது வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிச்சியமாக பெற்றோர்களே… உங்கள் பிள்ளைகள் மீது கண்காணிப்பு தேவை என்பதை முதல் தெரிந்து கொள்ளுங்கள்!!

Special News :

Related Posts :

Entertainment :

Special News

airoplane
பயணிகள் விமானம் தலைகீழாக விழுந்து விபத்து, கனடாவில் சம்பவம்!
ravisanth karunakara
புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை!
ship
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பு!
archuna
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மற்றொரு கருப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் என அர்ச்சுனா சுட்டிக்காட்டு!
home
புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை என அறிவிப்பு!
thaiyiddii
தையிட்டி விகாரையின் இடமாற்றம், அநுர அரசிற்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!