சைபர் செக்யூரிட்டி கேஸ்பர்ஸ்கி (kaspersky) மென்பொருளுக்கு அமெரிக்கா தடை.

ரஷ்யாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கி (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“கேஸ்பர்ஸ்கி தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,” என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

“ரஷ்ய நிறுவனமான கேஸ்பர்ஸ்கை கொண்டு அமெரிக்காவின் மிக முக்கிய விபரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஷ்யா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்கு அவர்களது தொழில்நுட்பம் ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமொண்டோ தெரிவித்துள்ளார்.

மென்பொருள் துறையில் பிரபலமாக அறியப்படும் கேஸ்பர்ஸ்கி நிறுவனம் ரஷியாவின் மாஸ்கோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் உலகம் முழுக்க 31 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுக்க 400 மில்லியன் பேரும், 200-க்கும் அதிக நாடுகளில் 2.7 லட்சம் கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

airoplane
பயணிகள் விமானம் தலைகீழாக விழுந்து விபத்து, கனடாவில் சம்பவம்!
ravisanth karunakara
புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை!
ship
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பு!
archuna
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மற்றொரு கருப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் என அர்ச்சுனா சுட்டிக்காட்டு!
home
புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை என அறிவிப்பு!
thaiyiddii
தையிட்டி விகாரையின் இடமாற்றம், அநுர அரசிற்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!