யாழ்ப்பாணம் மாவட்டம் – குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டடிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வரே இன்றைய தினம் (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களையும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.