கிளிநொச்சி மதுபானச்சாலை தொடர்பை ஏற்றுக்கொண்டார் விக்னேஸ்வரன்!

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக்கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட ரணில் விக்கிரமசிங்க இந்த மோசமான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். தேர்தல் வெற்றிக்காக அவர் மேற்கொண்ட பல மோசமான நடவடிக்கைகளால் விரக்கியடைந்த மக்கள் அவரை மீண்டும் நிராகரித்திருந்தனர்.

ரணில் அரசில் பல தமிழ் எம்.பிக்களும் மதுபானச்சாலை உரிமம் பெற்றதாக தகவல் வெளியானது. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி. ரெலோ உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக க.வி.விக்னேஸ்வரனின் பெயரும் இதில் பேசப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேரடியாக மதுபானச்சாலை உரிமத்தில் சம்பந்தப்படாமல், பினாமிகள் மூலம் இதை கையாண்டாலும், ஏதாவதொரு ஆவணத்தில் சிக்கி விடுவார்கள்.

தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபட்டதை தொடர்ந்து, அவரை A7TV தொடர்பு கொண்டு கேட்டபோது-

“மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், கிளிநொச்சியில் மதுபானச்சாலை அமைக்க பெண்ணொருவர் சிபாரிசு கடிதம் கேட்டார். அதற்கான சிபாரிசு கடிதம் வழங்கினேன். அவ்வளவுதான். அதற்கு பின்னர் என்ன நடந்ததென எனக்கு தெரியாது“ என்றார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

laxmi
லட்சுமி ஜெயந்தி அன்று மகாலட்சுமியின் அருளைப் பெற இப்படி வழிபட மறக்காதீர்கள்.
WEATHER
நாட்டில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை!
death
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு, எந்த நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
trump
இலங்கைத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப், நழுவும் அநுர!
digetal
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் விசேட அறிவிப்பு!
jaffna
யாழ் குடும்பம் ஒன்றின் மனிதாபிமானம்!