கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(31) மாலை 6.30மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய கந்தசாமி பிரணவன் எனும் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!