முல்லைத்தீவில் 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்: இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (16.07.2026) மாலை இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!