நாமலுக்குப் பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன – பொதுஜன பெரமுன சாடல்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினரை முடக்கும் செயற்பாட்டில் இந்த அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்தச் சட்டத்தின் கீழ் 46 பேரைக் கைது செய்து வைத்துள்ளது.

இலங்கையில் நீதித்துறைச் சுயாதீனம் மீறப்படுவது மற்றும் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளன.

அரசாங்கம் தனது ஜனநாயக விரோதப் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால், சர்வதேச அளவில் இலங்கை கடுமையான எச்சரிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!