ஷிரந்தி ராஜபக்‌ஷ விவகாரம்: நீதிமன்ற உத்தரவை சிறைச்சாலை அதிகாரிகள் புறக்கணித்ததாகக் குற்றச்சாட்டு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த தெளிவான உத்தரவை சிறை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டதாக மகிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே குற்றம்சாட்டியுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது, ​​நேற்றைய தினம் தனியார் வைத்தியசாலையில் உள்ள அவரது வழக்கமான கண் வைத்தியரிடம் அவரை முன்னிலைபடுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், சிறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து, அவரை உரிய வைத்தியரிடம் அனுப்ப தவறிவிட்டதாக மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நோயாளியின் சிகிச்சை தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இப்போது சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சென்றுவிட்டதா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளதுடன், இது மிகவும் வருத்தமளிக்கும் ஒரு நிலை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிறை வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்ட பிறகு, ஷிரந்தி ராஜபக்ச தேசிய வைத்தியசாலைக்கோ அல்லது கண் வைத்தியசாலைக்கோ அனுப்பப்படுவார் என்று பல்வேறு செய்தி அறிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளன.

இருப்பினும், நேரடி நீதிமன்ற உத்தரவு இருக்கும் சூழலில், அதை மாற்றுவதற்கோ அல்லது புறக்கணிப்பதற்கோ சிறை அதிகாரிகளுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், இது முற்றிலும் தவறான செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!