முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருலப்பனையில் தனது இல்லத்தில் இருந்தபோது ஏற்பட்ட இதய பாதிப்பு பிரச்சினை காரணமாக இன்றைய தினம் (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், கடந்த சில நாட்களாக அவர் பல வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புகழ்பெற்ற நிபுணர்கள் குழு ஒன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தேவையான அவசர வைத்திய சிகிச்சையை தற்போது அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது.

இருப்பினும், இன்று காலை திடீரென ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு காரணமாக, அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Vattukottai
வட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!
JusticeForUruthirapuramGirl
பரபரப்பு! "அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்" - கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!
SarathWeerasekara
டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
EasterSundayAttacks
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறை!
MankulamStudents
மாணவி தவறி விழுந்ததாக குற்றச்சாட்டு: கண்டி சாலை பேருந்து சாரதி மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை!
ShiranthiRajapaksa
கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்