நிகழ்நிலை காப்புச் சட்ட வழக்கு: எம்.பி அர்ச்சுனா உட்பட மூவரை நவம்பர் 2இல் ஆஜராக உத்தரவு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத அர்ச்சுனா மற்றும் அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விஜயகுமார் இன்று திங்கட்கிழமை (12) உத்தரவிட்டார்.

வைத்தியர் சுகுணன் மீது அவதூறாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநால் மற்றும் சழுக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28ஆம் திகதி நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து, இன்று 12ஆம் திகதி எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் வை.விஜயகுமார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டு வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

இது தொடர்பாக சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த வழக்கு முஸ்லிம்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு அல்ல, இது வழக்காளியான வைத்தியர் சுகுணன் மீது அவதூறாக முகநூல்களில் பதிவிட்டமை தொடர்பாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கு. இதனை முஸ்லிம்களுக்கு எதிராக போடப்பட்டதாக தவறான விம்பத்தை காட்டி சமூக வலைத்தளங்களில் அரசியல் நோக்கங்களுக்காக பிழையாக பதிவிட்டு வருகின்றனர் என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Vattukottai
வட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!
JusticeForUruthirapuramGirl
பரபரப்பு! "அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்" - கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!
SarathWeerasekara
டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
EasterSundayAttacks
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறை!
MankulamStudents
மாணவி தவறி விழுந்ததாக குற்றச்சாட்டு: கண்டி சாலை பேருந்து சாரதி மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை!
ShiranthiRajapaksa
கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்