பிரித்தானியாவின் மிடில்ஸ்பரோவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்!

பிரித்தானியாவின் மிடில்ஸ்பரோவில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 4ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) உறுப்பினர்களும் வருகை தந்து பங்கேற்றனர்.

நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாலை அணிவித்தலும் நினைவுரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அவரது வாழ்க்கையையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்தனர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த திலீபன் அண்ணா, செப்டெம்பர் 26ஆம் திகதி உயிரிழந்தார். அவரது நினைவு நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களிடையே தியாக தீபம் திலீபனின் நினைவையும் தமிழ் மக்களின் வரலாற்றையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்நினைவேந்தல் நிகழ்வு அமைந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Vattukottai
வட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!
JusticeForUruthirapuramGirl
பரபரப்பு! "அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்" - கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!
SarathWeerasekara
டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
EasterSundayAttacks
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறை!
MankulamStudents
மாணவி தவறி விழுந்ததாக குற்றச்சாட்டு: கண்டி சாலை பேருந்து சாரதி மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை!
ShiranthiRajapaksa
கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்