சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்து வரும் பௌத்த பிக்குகள் காவி உடையை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கும் வகையில், சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை சற்றுமுன்னர் அறிவித்துள்ளார.
சம்பந்தப்பட்ட பௌத்த பீடம் அல்லது நிக்காயத்திடமிருந்து காவி உடையை அணிய வேண்டாம் என அறிவுறுத்தல் கிடைக்கும் வரை, இந்த உரிமை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள விதிமுறைகள் மற்றும் நிரந்தரக் கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
