சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக 4 நாட்களைக் கடந்துள்ளது.

வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் தொடக்கத்தைப் பெற்ற இத்திரைப்படம், அடுத்தடுத்த நாட்களிலும் திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
அந்தவகையில், கடந்த 4 நாட்களில் மட்டும் உலகளவில் சுமார் 425 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெயிலர் 2’ இணைந்துள்ளது.
வரும் நாட்களில் இத்திரைப்படம் வசூலில் மேலும் பல சாதனைகளை முறியடித்து முதலிடத்தைப் பிடிக்கும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
