கட்டுநாயக்க விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த வெளிநாட்டுப் பெண் போதைப்பொருளுடன் சிக்கினார்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 237 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கோலாவை சேர்ந்த 54 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபர், அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு வந்து, அங்கிருந்து கத்தார் நாட்டின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், அவர் சக்கர நாற்காலியில் விமான நிலைய முனையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது குறித்த பெண்ணின் நடத்தையில் சந்தேகித்த சுங்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, 14 கொக்கைன் போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பல போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியதாகவும் அந்தபெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
மகிந்த ராஜபக்ஷவை நேரில் பார்வையிட்டார் சீலரத்ன தேரர்: உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அறிவிப்பு!
GnanasaraThero
ஞானசார தேரரின் காவி ஆடையைக் காக்க பிக்குகள் முன்னெடுக்கும் பாதயாத்திரை கொழும்பை அண்மிக்கிறது!
ShiranthiRajapaksa
சிறையில் இருந்தபோது மாரடைப்பு: ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை!
NamalRajapaksa
‘கிரிஷ்’ ஒப்பந்த வழக்கு: நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்!
YoshithaRajapaksa
அரசு நிதி முறைகேடு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ
SriLankaWeather
நாளை மாலை வரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!