அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
