வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கைக்கு அருகில் உள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தீவிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், வடக்கு அந்தமான் தீவுகளைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாகவும் அது, எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை வேளைக்கு முன்னரே மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளியாக உருமாறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வங்காள விரிகுடா பகுதியில் இன்று (24) உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த அமைப்பு, அப்பகுதியில் நிலைத்திருக்கும் நிலையில், நாளைக்குள் (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு நோக்கி நகர்ந்து, நாளைக்குள் மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கும், நாளை மறுதினம் திங்கட்கிழமை (26) காலைக்குள் மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் பெரும் சூறாவளியாக உருமாறுவதற்கும் அதிக சாத்தியக்கூறுகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பு இலங்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், இந்த காற்றழுத்த மண்டலத்தை நோக்கிய காற்றின் ஓட்டம் இலங்கையை கடந்து செல்வதால் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வட, வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கடும் மின்னல் ஏற்படலாம். இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!