அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!

கலஹா காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஒரே இரவில் இரண்டு வழிபாட்டுத் தலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கலஹா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அதே இரவில் கலஹா, உத்தெல்தொட்ட பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குள் நுழைந்த நபர்கள், அங்கிருந்த கரகத்தில் வைக்கப்பட்டிருந்த சில சூடாமணிகளையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கலஹா காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் தடயவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விகாரையிலிருந்து திருடப்பட்ட சூடாமணிகளின் பெறுமதி சுமார் நான்கு இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளை கலஹா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
மகிந்த ராஜபக்ஷவை நேரில் பார்வையிட்டார் சீலரத்ன தேரர்: உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அறிவிப்பு!
GnanasaraThero
ஞானசார தேரரின் காவி ஆடையைக் காக்க பிக்குகள் முன்னெடுக்கும் பாதயாத்திரை கொழும்பை அண்மிக்கிறது!
ShiranthiRajapaksa
சிறையில் இருந்தபோது மாரடைப்பு: ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை!
NamalRajapaksa
‘கிரிஷ்’ ஒப்பந்த வழக்கு: நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்!
YoshithaRajapaksa
அரசு நிதி முறைகேடு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ
SriLankaWeather
நாளை மாலை வரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!