முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
