தேர்தல் விதிமீறல் வழக்கு: பதுளை நீதிமன்றத்தில் முன்னிலையானார் ஹரின் பெர்னாண்டோ!

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று (20) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவிருந்த நாளில், பகல் வேளையில் பதுளை நகரில் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலம் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக 2024 நவம்பர் 20ஆம் திகதி பதுளை காவல்துறை தலைமையகத்திற்குச் சென்ற ஹரின் பெர்னாண்டோ, அப்போது கைது செய்யப்பட்டு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, விடயங்களை ஆராய்ந்த நீதவான், அவரை 5 இலட்சம் ரூபாய் சொந்தப் பிணை செல்ல அனுமதித்தார்.

இந்தநிலையில், குறித்த வழக்கு இன்று மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஹரின் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
மகிந்த ராஜபக்ஷவை நேரில் பார்வையிட்டார் சீலரத்ன தேரர்: உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அறிவிப்பு!
GnanasaraThero
ஞானசார தேரரின் காவி ஆடையைக் காக்க பிக்குகள் முன்னெடுக்கும் பாதயாத்திரை கொழும்பை அண்மிக்கிறது!
ShiranthiRajapaksa
சிறையில் இருந்தபோது மாரடைப்பு: ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை!
NamalRajapaksa
‘கிரிஷ்’ ஒப்பந்த வழக்கு: நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்!
YoshithaRajapaksa
அரசு நிதி முறைகேடு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ
SriLankaWeather
நாளை மாலை வரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!